Main Menu

விஜய் – விஜய் சேதுபதி இணையும் தளபதி 64…… பூஜையுடன் தொடங்கியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் தளபதி 64 படம் பூஜையுடன் தொடங்கியது.

தளபதி 64 பட பூஜையில் கலந்து கொண்ட பிரபலங்கள்’பிகில்’ படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தற்போது இதில் விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. ‘தளபதி 64’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீசும் நடிக்க உள்ளார். 
அடுத்து விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சாந்தனு நடிக்க உள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து இந்த படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதையும் அறிவித்துள்ளது. தமிழில் ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தவர்தான் மாளவிகா மோகனன். விஜய் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக வலம் வரவுள்ளார். 

போஸ்டர்

இந்நிலையில், இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கப்பட்டது. இதில் விஜய், விஜய் சேதுபதி, அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, ஸ்டண்ட் சில்வா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பகிரவும்...