Main Menu

வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழப்பு – விமான சேவைகள் பாதிப்பு!

பிரித்தானிய விமான சேவை நேற்றைய தினம்(ஞாயிற்றுக்கிழமை) பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸின் வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாகவே பிரித்தானிய விமான சேவை பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

பிரித்தானியாவிலிருந்து புறப்படும் மற்றும் உள்நுழையும் சில விமானங்கள் இதன்போது தாமதமடைந்திருந்ததாக கூறப்படுகின்றது.

வான் போக்குவரத்து சமிக்ஞைக் கட்டமைப்பு செயலிழந்தமையால், பிரான்ஸ் மற்றும் ஸ்பெய்ன் வான் பரப்பினூடாகப் பயணிக்கும் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் எயாவேய்ஸ் தெரிவித்துள்ளது.

இருப்பினும், எத்தனை விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகவில்லை.

பகிரவும்...