Main Menu

வாக்குகளை எண்ணும் பணி மற்றும் கட்சி முகவர்கள் நியமனம் குறித்து வர்த்தமானி அறிவிப்பு

2020 பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் 6 ஆம் திகதி வியாழக்கிழமை 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 விகிதமாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்.ஜே.அபேசேகரே மற்றும் எஸ்.ரத்னஜீவன் ஹூல் ஆகியோரின் கையொப்பங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை வாக்குப் பெட்டிகளை கண்காணிக்க ஒவ்வொரு வாக்குமையத்திலும் ஒரு கட்சி அல்லது குழுவிலிருந்து தலா இரண்டு முகவர்களை நியமிக்க ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இதேவேளை புதன்கிழமை இரவு, வாக்குகளை எண்ணும் வாக்குச் சாவடிகளுக்கு தலா இரண்டு பேரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...