Day: August 3, 2020
பிலிப்பைன்ஸில் மீண்டும் கடுமையான தனிமைப் படுத்தல் விதிகளை அமுல்படுத்த திட்டம்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுகளின் சமீபத்திய உயர்வைச் சமாளிக்க பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகளை மீண்டும் அரசாங்கம் கொண்டு வரவுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே இந்த முடிவினைமேலும் படிக்க...
பர்முயுலா-1: பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில் ஹாமில்டன் முதலிடம்!
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் நான்காவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், மெர்சிடஸ் பென்ஸ் அணி வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.மேலும் படிக்க...
உலகின் இளம் பிரதமர் சன்னா மரினுக்கு திருமணம்!
உலகின் இளம் பிரதமரான பின்லாந்து பிரதமர் சன்னா மரின், அவரது நெருங்கிய நண்பரும், கால்பந்து வீரருமான மார்கஸ் ரெய்கோனனை திருமணம் செய்துள்ளார். 34வயதான சன்னா மரின், மார்கஸ் ரெய்கோனனை உத்தியோகபூர்வ பிரதமரின் இல்லமான கெசராண்டாவில் மணந்ததாக பின்லாந்து அரசாங்கம் ட்வீட் செய்துள்ளது.மேலும் படிக்க...
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ – சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள அப்பில் தீ என அழைக்கப்படும் காட்டுத் தீ காரணமாக சுமார் 7 ஆயிரத்து 800 குடியிருப்பாளர்களை குறித்த பகுதியலிருந்து வெளியேறியுள்ளனர். கலிபோர்னியாவின் பியூமண்ட் நகருக்கு அருகிலுள்ள செர்ரி பள்ளத்தாக்கில் கடந்த வெள்ளிக்கிழமை பரவிய காட்டுத் தீ தற்போதுமேலும் படிக்க...
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு கொரோனா
கர்நாடக முதலமைச்சரும் பா.ஜ.க.மூத்த தலைவருமான எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “எனது உடல்நிலை சீராக இருக்கின்றது. மருத்துவர்களின் அறிவுறுத்தலை ஏற்று முன்னெச்சரிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். அத்துடன் அண்மையில் என்னை சந்தித்தமேலும் படிக்க...
கொரோனாவுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் டெங்கு – கொழும்பிலேயே அதிக பாதிப்பு
நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளமை மக்களை பீதியடையச் செய்துள்ளது. கடந்த ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்மேலும் படிக்க...
சட்டவிரோத சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 3444 முறைப்பாடுகள் பதிவு- பெப்ரல்
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததன் முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை தேர்தல் சட்டங்களை மீறிய சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 940 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட பெப்ரல் அமைப்பின்மேலும் படிக்க...
மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவிப்பு
மும்மொழி திட்டத்தை எதிர்த்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனையளிக்கிறது.மேலும் படிக்க...
வாக்குகளை எண்ணும் பணி மற்றும் கட்சி முகவர்கள் நியமனம் குறித்து வர்த்தமானி அறிவிப்பு
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கை ஓகஸ்ட் 6 ஆம் திகதி வியாழக்கிழமை 07 மணி அல்லது 08 மணிக்குத் தொடங்கும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் வாக்காளர்களின்மேலும் படிக்க...
பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி
கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்சமயம் பிரதான ஊடக நிறுவனங்கள் சில இதற்கான பதிவை மேற்கொண்டுள்ளதாக தேர்தல் திணைக்களம்மேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். முருகேசு சின்னத்தம்பி அவர்கள்

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு சின்னத்தம்பி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை, அன்பு மனைவி சின்னமணி அன்பு பிள்ளைகள் சிவகுமார் (பிரான்ஸ்), உதயகுமார்மேலும் படிக்க...