Main Menu

வவுனியாவில் வாகன விபத்து : இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் அதேவீதியில் வவுனியா நோக்கிவந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...