Main Menu

வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலிகள் உடைந்து விழுந்தன – மோடி

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலிகள் உடைந்து விழுந்தன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியே செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தயவு செய்து காஷ்மீர் பற்றிய முடிவுகளை எதிர்த்த நபர்களின் பட்டியலைப் பாருங்கள் குடும்ப அரசியல்வாதிகள், பயங்கரவாதத்திற்கு அனுதாபம் காட்டுபவர்கள், சுய நல குழுக்கள் எதிர்க்கின்றனர்.

அரசியல் பாகுபடின்றி இந்திய மக்கள் இந்த முடிவை பாராட்டியுள்ளனர். அவசியமானது ஆனால் சாத்தியமற்றது என்று மக்கள் கருதியவை தற்போது மெய்யாகியுள்ளது.

370வது மற்றும் 35 ஏ பிரிவினால் மக்களின் வளர்ச்சி தடைபட்டிருந்தது. வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருந்த சங்கிலி உடைந்து விழுந்தன. இனி மக்கள் தங்களின் நோக்கத்தை தானே வடிவமைப்பார்கள்.

இனி அவர்களுக்கு வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பை வழங்குவோம். லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள எனது சகோதர சகோதரிகள் சிறப்பான எதிர்காலத்தை விரும்புகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும், தங்கள் பிரதிநிதிகளை அவர்களே தேர்ந்தெடுக்க முடியும் என்பதை ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...