Main Menu

வருடக்கடைசி – தென் கிழக்கு பிராந்தியங்களில் 30 ஆண்டுகளாக அடை மழை!

பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியங்களை அடை மழை சூழ்ந்து, அன்றாட வாழ்க்கையினை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. ஆனால் இது இவ்வருடத்தில் மாத்திரம் நடக்கும் ஒன்றல்ல.  ஒவ்வொரு வருடமும் தென் கிழக்கு பிராந்தியங்களில் வசிக்கும் மக்கள் அடை மழைக்குள் தான் தங்கள் வருடக்கடைசியினை கழிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் 200 பேர் வரை இயற்கை அனர்த்தம் (மழை, வெள்ளம்)  காரணமாக உயிரிழந்துள்ளனர். இவ்வருடத்தில் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். தவிர இருவரை காணவில்லை.  கடந்த முப்பது ஆண்டுகளில் இதுவரை சடலம் மீட்கப்படாமல் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 5.  1992 ஆம் ஆண்டில் மாத்திரம் தென்கிழக்கின் அனைத்து மாவட்டங்களையும் சேத்த்து மொத்தமாக 46 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் Aude மாவட்டத்தில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.  மொத்தமாக கடந்த 30 வருடங்களில் 200 பேர் உயிரிழந்துள்ளனர். 

பகிரவும்...