Main Menu

வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் – சி. சிவமோகன்

வடமாகாணத்திற்கு மாகாணத்தின்  புவியியல்  வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக  நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். 

இன்று அவரிடம் வட மாகாண ஆளுநராக யாரை நியமிப்பது சிறந்தது என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஆளுநராக நியமிக்கப்படுபவர் தமிழ் மக்களின் வாழ்வியலை பூரணமாக புரிந்து கொண்டவரும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களில் போதிய அனுபவம்  உள்ளவராகவும் உள்ள  வடமாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழர் நியமிக்கப்பட வேண்டும். 

வடமாகாணத்திற்கு ஒரு ஆளுனரை நியமிக்காமல் விடுவது சிங்கள தேசத்தை சேர்ந்த ஒரு இராணுவ அதிகாரியை  வடமாகாண ஆளுநராக  நியமிப்பதற்கான இழுத்தடிப்பா என்ற சந்தேகம் எழுகின்றது. 

அப்படி ஒரு விடயத்தை ஒரு போதும் செய்ய முயற்சிக்க கூடாது.  ஆனால் தமிழர்கள் வாழும் பிரதேசங்களில்  தமிழர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்.  அதற்கு மாற்றாக ஒரு போதும் செய்ய முயற்சிக்க கூடாது.  இங்கு அதற்கு மாற்றாக அரசாங்க அதிபர்கள் சிங்கள உயர்  அதிகாரிகளை நியமிப்பதால் மக்கள் பாரிய இடையூறுகளை சந்தித்து வருகிறார்கள் என்பது வெளிப்படையானது. 

எனவே வடக்கு மாகாண ஆளுநர் தெரிவில்  தீர்க்கமான தெளிவான முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

பகிரவும்...