Main Menu

வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டு விட்டன – அரசாங்கம்

30 ஆண்டுகள் இடம்பெற்ற யுத்தத்தை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் 97 வீதமான நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் மற்றும் அரச காணிகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, 100 இல் 3 வீதமான காணிகள் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இதேவேளை இந்த விடயம் உளவுத்துறை ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் பெறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் தேசிய பாதுகாப்பு குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், மீதமுள்ள 97 வீதமான நிலங்கள் அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பகிரவும்...