Main Menu

ரஷ்யா மீது மிகப்பெரிய பொருளாதார தடைகளை விதித்தது ஐரோப்பிய ஆணையம்

ரஷ்யா மீது விரிவான புதிய பொருளாதார தடைகளை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ளார்.

பொருளாதாரத் துறை, எரிசக்தி, போக்குவரத்து மற்றும் ரஷ்ய உயரடுக்கிற்கான விசாக்கள் உள்ளிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டிருக்கும் பொருளாதாரத் தடைகள், பிரஸ்ஸல்ஸில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வெளியிட்டார்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை அல்லது விமானங்களுக்கான உதிரி பாகங்களை வாங்க முடியாது என்று வான் டெர் லேயன் கூறினார்.

‘அங்கீகரிக்கப்பட்ட பாரிய மற்றும் இலக்கு பொருளாதாரத் தடைகளின் தொகுப்பு ஐரோப்பிய ஒன்றியம் எவ்வளவு ஒன்றுபட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது’ என்று அவர் டுவீட் செய்தார்.

இதனிடையே, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரைனுக்கு 300 மில்லியன் யூரோக்கள் உதவியும், இராணுவ உபகரணங்களும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

பகிரவும்...