Main Menu

ரஷ்யாவில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 9,268 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

அந்தவகையில் ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 5 ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸால் ஏற்படும் சுவாச நோய் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 138 பேர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக நாடு தழுவிய உயிரிழப்பு எண்ணிக்கை 4,693 ஆக உயர்ந்துள்ளது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உலகளவில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...