Main Menu

ரஷியாவில் சோகம்… தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த அமைச்சர்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் ஜினிச்சேவ் நீண்ட காலம் பணியாற்றி உள்ளார்.


ரஷியாவின் அவசரகால சூழ்நிலைகள் துறை அமைச்சராக பணியாற்றியவர் எவ்ஜெனி ஜினிச்சேவ் (வயது 55). இவர் ஆர்க்டிக் நகரமான நோரில்ஸ்கில் மீட்புக் குழுவினரின் பயிற்சி முகாமை பார்வையிட்டார். அப்போது, தடுமாறி தண்ணீரில் விழுந்த ஒருவரை காப்பாற்ற முயன்றபோது அமைச்சர் ஜினிச்சேவ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இத்தகவலை அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
ஜினிச்சேவ் 2018ல் ரஷியாவின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு முன்பு பதவி வகித்த அமைச்சர், சைபீரியாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து பதவி விலகினார், 

2016 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கலினின்கிராட் பிராந்தியத்தின் செயல் ஆளுநராக ஜினிச்சேவ் இரண்டு மாதங்கள் பதவி வகித்தார். அதற்கு முன் நீண்ட காலம், அதிபர் விளாடிமிர் புதினின் தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...