Main Menu

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபர் இணக்கம்

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மூவரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளநிலையில் இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

உயிர்த்தஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் சில போராளிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றத்தில் ஒன்றியத்தின் தலைவர் செயலாளர் மற்றும் சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகியோர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இவர்களின் விடுதலை குறித்து எம்.எ.சுமந்திரன் சட்டமா அதிபருக்கு கடிதம் மூலமாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்திருந்த நிலையில் அதனை பரிசீலனை செய்த சட்டமா அதிபர் மூவரையும் பிணையில் விடுவிக்கும் ஆலோசனையை நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்த வழக்கு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இவர்களை விடுவிக்கும் ஆலோசனையை தொலைநகல் மூலமாக அனுப்பிவைத்துள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார் என சுமத்திரன் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...