Main Menu

மோடியுடன் மைத்திரி தனியாகவும் பேச்சு வார்த்தை..

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பயணம் மூன்று காரணங்களுக்காக, வெற்றிகரமானதாக இருந்தது என்று புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, புதுடெல்லி சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இரவு கொழும்பு திரும்பினார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட, புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் ஒஸ்ரின் பெர்னான்டோ, இந்தியப் பிரதமருக்கும், சிறிலங்கா அதிபருக்கும் இடையிலான சந்திப்பு நன்றாக இருந்தது, சிநேகபூர்வமாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இடம்பெற்றது என்று கூறினார்.

இந்தப் பேச்சுக்களில், இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், வெளிவிவகாரச் செயலர் விஜய் கோக்ஹலே,  கொழும்புக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, இந்திய வெளிவிவகார அமைச்சின், இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கான மேலதிக செயலர் தினேஸ் பட்நாயக் ஆகியோருடம் கலந்து கொண்டனர்.

குழுநிலைப் பேச்சுக்களுக்குப் பின்னர், இரண்டு நாடுகளின் தலைவர்களும், தனித் தனியாக பேச்சுக்களிலும் ஈடுபட்டனர்.

இந்தப் பேச்சுக்களின் போது, இந்திய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா மீனவர்களின் விடுதலை குறித்து சிறிலங்கா அதிபர் பேசினார்.

அப்போது, இரண்டு நாடுகளும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களைத் தடுத்து வைக்கக் கூடாது என்ற முன்மொழிவை இந்தியப் பிரதமர் முன்வைத்தார். அதனை சிறிலங்கா அதிபரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

பகிரவும்...