Main Menu

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ள மைத்திரி

ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  எதிர்வரும் 30ம் திகதி வியாழக்கிழமை  புதுடில்லியில் நடைப்பெறவிருக்கும்  இந்நிய  பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு  வைபவத்தில் கலந்துக் கொள்ளவிருப்பதாக   ஜனாதிபதி செயலக பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வெள்ளியன்று  மோடியுடன் தொலைபேசியில்  தொடர்புக் கொண்டு பேசிய நிலையில் இவரது புதுடில்லி  பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இன்று சனிக்கிழமை  அந்த அதிகாரி  இந்நிய ஊடகமொன்றுக்கு  தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெள்ளிக்கிழைமை  இந்திய பிரதமரின்   மகத்தான  வெற்றியை  பாராட்டி   ஜனாதிபதி   வாழ்த்து செய்தியொன்றை அனுப்பி வைத்திருந்தார்.’   சிறிது நேரத்திற்கு முன்னதாக  தொலைபேசியில்  தொடர்பு கொண்டு  பிரதமர் மோடியை வாழ்த்தியது பெருமகிழ்ச்சிக்குரியது அவர்  மீண்டும்  பிரதமராகியிருப்பது  உலகின்  மிகப்பெரிய  வல்லரசு   நாடான  இந்நியாவுடன்  இணைந்து இலங்கையும் கொண்டாடுகின்றது தமது இரு தரப்பு உறவுகளை மேலும்   வளர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாக   தனது டுவிட்டர் பதிவில்  குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி  சிறிசேனவும், பிரதமர் மோடியும் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டதால்  முறைப்படியான அழைப்பிதழ் அனுப்பப்பட்டு அது ஏற்றுக் கொள்ளப்படும் வரை தாங்கள் எதனையும்  உறுதி செய்ய கூடிய  நிலையில் இல்லை என  இந்நிய  வெளிவிவகார  அமைச்சின் அதிகாரிகள் கொழும்பில் உள்ள  த இந்து  பத்திரிகையின் நிருபருக்கு தெரிவித்துள்ளார்.

 தற்போதைய  தருணத்தில்  இவ்விடயம் தொடர்பில்  தங்களிடம் உரிய தகவல்கள்  ஏதும் இல்லை  எனவும், தீர்மானம் எடுக்கப்பட்டதும் ஊடகங்களுக்கு தகவல்களை பகிரந்துக் கொள்வோம் என  அரசாங்க  வட்டார தகவல்கள்  தெரிவித்துள்ளன. அயல் நாடுகளின் அரச தலைவர்களும்  பிரதமர் மோடியின்  பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்வார்கள் என்று   இராஜதந்நிர தகவல்கள்  குறிப்பிடுகின்றன.

பகிரவும்...