Main Menu

மே 11 ஆம் திகதிக்குள் 5.7% பிரெஞ்சு மக்கள் கொரோனாவினால் பாதிக்கப்படலாம்

கொரோனா வைரஸ் காரணமாக உள்ளிருப்பு சட்டத்தை வரும் மே 11 ஆம் திகதி வரை அரசு நீட்டித்துள்ளது.  இந்நிலையில், மே 11 ஆம் திகதிக்குள் 5.7% வீதமான பிரெஞ்சு மக்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்படலாம் என அதிச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று இத்தகவலை Institut Pasteur நிறுவனம் வெளியிட்டுள்ளது. தேசிய சுகாதார நிறுவனம், மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் இணைந்து இந்த புதிய ஆய்வினை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.  அதன்படி, மே மாதம் 11 ஆம் திகதிக்குள் மொத்தமாக 3.7 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகுவார்கள். இதில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.  அதேவேளை, மே 11 ஆம் திகதியின் பின்னர் <<இரண்டாம்கட்ட தொற்றுநோய் அலை>> ஏற்படும் எனவும், அதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சி செய்வதே ஒரே வழி எனவும் இந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

பகிரவும்...