Main Menu

சீனாவில் இன்று மட்டும் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இன்று (புதன்கிழமை) மட்டும் 30 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சீனாவின் மொத்தம் 82,788 கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அதே நேரத்தில் இறப்புகளின் எண்ணிக்கை 4,632 ஆக உள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் நோயாளிகாளாக நேற்று மட்டும் 11 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பகிரவும்...