Main Menu

மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து- ஆய்வைத் தொடங்கியது இந்திய நிறுவனம்!

கொரோனாவைத் தடுக்க மூக்கு வழியே செலுத்தும் புதிய தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இந்தப் பரிசோதனைக்கு அனுமதியளித்துள்ளதுடன் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்தை ஊசியால் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம் என்றும், 0.1 மில்லி அளவிலான மருந்தை மூக்குக்குள் செலுத்திக்கொண்டாலே நோய் எதிர்ப்புத்திறன் உருவாகிவிடும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பகிரவும்...