Main Menu

முறையான வெளியுறவுக் கொள்கை நாட்டில் இல்லை -ஐக்கிய மக்கள் சக்தி

வல்லரசு நாடுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கும் இடைநிலை நாடாக இலங்கை மாறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே தலதா அத்துகோரல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் நாட்டில் ஒரு முறையான வெளியுறவுக் கொள்கை இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாட்டின் தலைவர் பகிரங்கப்படுத்த வேண்டும் என தலதா அத்துகோரல கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...