Main Menu

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் முதலமைச்சருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். விஜய் கட்சியின் எக்ஸ் தளத்தில் கட்சி தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் முதன்முறையாக அரசியல் கட்சி தலைவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிரவும்...