Main Menu

மீள பறிக்கப்பட்ட திருமதி அழகி கிரீடம்- போட்டியில் சர்ச்சை

இலங்கையில் நடத்தப்பட்ட திருமதி அழகிப் போட்டியில் எவரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் இடம்பெற்றமையினால் பதற்றமான நிலைமை ஏற்பட்டிருந்தது.

குறித்த போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கிய கிரீடத்தை மீள அகற்றி இரண்டாவது வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பெண்ணுக்கு அணிந்து, அவரே, திருமதி இலங்கையின் 2021ஆம் ஆண்டுக்கான அழகியாக தெரிவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு, கொழும்பில் நடைபெற்ற திருமதி இலங்கை 2021ஆம் ஆண்டுக்கான போட்டியில் இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமரின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க உள்ளிட்டோர் முன்னிலையில், போட்டியாளர் எண் 20, புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, அவருக்கு மகுடம் சூட்டப்பட்டது.

இதன்போது அவர் விவாகரத்து பெற்றவர் என, அந்நிகழ்வில் அழைக்கப்பட்ட ஒரு குழுவினால் எடுத்துரைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட கரோலின் ஜூரி, போட்டியாளர் எண் 20 இன் கிரீடத்தை அகற்றி, திருமதி.வொலார்ட்டுக்கு அணிவித்து அவரே உண்மையான வெற்றியாளர் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் பதற்றமான நிலைமை சிறிது நேரம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...