Main Menu

மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!

மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது.

மியன்மாரில் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 22 அதிகாரிகளின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ரொஹிஞ்சா இனத்தினர் மீதான வன்முறைகள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தில்  நடப்பிலுள்ள விசாரணையை மேலும் துரிதப்படுத்தும் விதத்தில் தடையுத்தரவுகள் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் குறித்த குற்றச்சாட்டுகளை மியன்மாரின் இராணுவ அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

அத்துடன், விசாரணையைத் தள்ளுபடி செய்யுமாறும் இராணுவ அரசாங்கப் பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

எனினும் ரொஹிஞ்சா இன ஆர்வலர்கள் விசாரணை தொடரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...