Main Menu

மிக மோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை

மிகமோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுவே மிகவும் சவாலான வாரமாக விளங்கப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல உயிரிழப்புகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அமெரிக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்காவிட்டால் மேலும் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என கூறியுள்ளார்.

ஆனாலும் பல உயிரிழப்புகள் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியுயோர்க்கிற்கு ஆயிரம் படைவீரர்களை அனுப்புவதாக தெரிவித்துள்ள டிரம்ப் கொரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் மலேரியா தடுப்பு மருந்தினை பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மகத்தான பிரஜைகளை காப்பாற்றுவதற்காக நாங்கள் பூமியையும் வானையும் அசைப்போம், நாங்கள் அனைத்து அதிகாரங்களையும், பயன்படுத்துவோம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...