Main Menu

மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சீன அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கும்  சீன அதிபர் ஜின்பிங்குக்கும்  இடையில்  சந்திப்பொன்று நடைபெறவுள்ளமையினால்,  அங்கு சீன பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

சீன பாதுகாப்புத்துறை, உட்துறை, வெளியுறவுத்துறை, சுற்றுலாத்துறைகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மாமல்லபுரத்துக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொண்டு  வருகின்றனர்.

குறிப்பாக  இரு தலைவர்களும் தங்கவுள்ள கோவளம் தாஜ் நட்சத்திர விடுதி, அவர்கள்  சுற்றிப் பார்க்க இருக்கும் மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், கடற்கரை ஆலயம் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே மாமல்லபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் வருவாய்த் துறையினர் மற்றும்  பொலிஸார், அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி.ஜின்பிங் இடையிலான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பு எதிர்வரும் ஒக்டோபர் 10 முதல் 12ஆம் திகதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...