Main Menu

மாடர்ன் உடைகளை அணிய மறுத்ததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்

பீகார் மாநிலத்தில் வசித்து வரும் பெண் நூரி பாத்திமா. 2015-ம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் நூரிக்கு திருமணம் நடந்தது.  சில நாட்கள் கழித்து இந்த தம்பதி டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்.


சில மாதங்கள் கழித்து, டெல்லியில் உள்ள நவீன பெண்கள் அணிவது போன்று மாடர்ன் உடை அணியும்படி மனைவியிடம் இம்ரான் கூறியுள்ளார். சிறிய அளவிலான ஆடைகளை அணியும்படியும், இரவு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், மதுபானம் குடிக்கவும் மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

நூரி இதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இம்ரான் ஒவ்வொரு நாளும் அவரை அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.  பல வருடங்களாக இந்த கொடுமை தொடர்ந்தது. மேலும், 2 முறை கட்டாயப்படுத்தி மனைவிக்கு கருக்கலைப்பும் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியேறும்படி மனைவியை இம்ரான் கூறியுள்ளார்.
இதற்கும் நூரி மறுத்ததால் அவருக்கு இம்ரான் முத்தலாக் கொடுத்து உள்ளார்.


இந்நிலையில், தனக்கு முத்தலாக் கொடுத்தது பற்றி நூரி போலீசாரிடம் நூரி புகார் அளித்துள்ளார். மேலும், பீகார் மாநில மகளிர் ஆணையத்திடமும் புகாரளித்தார். நூரி அளித்த புகாரின் பேரில் இம்ரானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

பகிரவும்...