Main Menu

மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் ஸாஹிட் மீது புதிய விசா ஊழல் குற்றச்சாட்டுகள்!

மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரான அஹமட் ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi) வெளிநாட்டு விசா தொடர்பிலான ஊழல் விவகாரத்தில் புதிய குற்றச்சாட்டை எதிர்நோக்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்றும் நாளையும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுவார் என்று மலேசிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்திலிருந்து அனுமதி பெற்று, மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே, 47 குற்றச்சாட்டுகளைத் முன்னான் துணை பிரதமர் ஸாஹிட் எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், சீனச் சுற்றுலாப் பயணிகளை மலேசியாவிற்கு அழைத்துவரும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டமை தொடர்பில் அவர் மேலும் 40 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு நாள்களுக்கு முன் அவர் மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்தால் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பகிரவும்...