மதுபானங்களை இணையத்தில் விற்க முடியுமா? – சென்னை உயர் நீதிமன்றம்
தமிழகத்தில் மதுபான நிலையங்களில் மதுபானங்களை இணையத்தில் விற்க முடியுமா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடைகள் திறக்கப்பட்ட மாநிலங்களில் 2 கிலோமீட்டருக்கு நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், தமிழகத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவோ ஆறு அடி இடைவெளியுடன் தனி நபர் விலகலை பின்பற்றவோ முடியாது எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
மதுபானக் கடைகளை திறக்க அனுமதிப்பதன் மூலம், குற்றங்களும், விபத்துக்களும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மதுபான விற்பனை அத்தியாவசிய நடவடிக்கை அல்ல என்றும் கூறியுள்ளார்.
மதுபானக் கடைகள் தொற்று பரவும் முக்கிய இடமாக மாறிவிடும் என்றும், மதுப்பழக்கம் உடையவர்கள் விடுபட்டுள்ள நிலையில் மதுக்கடைகளை திறப்பது அவர்களை மீண்டும் அடிமையாக்கிவிடும் என வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் பிற்பகலுக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பகிரவும்...