Main Menu

மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

கொரொனா தனிமைபடுத்தல் சட்டத்தின் ஊடாக மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றதென மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராமலிங்கம் சந்திரசேகர்  மேலும் கூறியுள்ளதாவது, “அராசாங்கத்தின் மக்கள் மீதான அடக்குமுறைகள் துரிதமடைந்துக் கொண்டிருக்கின்றன.

அத்துடன் இலவசக் கல்விக்குச் சாவுமணி அடிக்கும் கொத்தலாவல சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கான மூஸ்தீபுகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

மேலும் மக்களினால் கிடைக்கப்பெற்ற 2/3 பெரும்பான்மையை எதேச்சதிகாரத்துக்கு அரசாங்கம் பயன்படுத்துகின்றது.

அத்துடன் நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரொனாவையும் தனிமைபடுத்தல் சட்டத்தையும் பிரயோகித்து மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களையும் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கின்றது.

இதேவேளை நாட்டின் பொருளாதாரமும் மிகுந்த சீரழிவினை சந்தித்துள்ளதுடன் மக்களின் அன்றாடச் சீவனோபாயமும் மிகவும் பரிதாபமாக முடக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...