Main Menu

மகாராஷ்டிரா ஊரடங்கு : அவசியமின்றி வெளியேறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை!

மகாராஷ்டிரா  மாநகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் அவசியம் இன்றி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் புது வகையான வீரியம் மிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. உருமாறி உள்ள இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனவே மகாராஷ்டிராவில் கடந்த 22-ந் திகதி முதல் ஜனவரி 5-ந் திகதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...