Main Menu

பேரறிவாளனின் மனுவை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை விவகாரத்தில் தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன் தாக்கல் செய்த மனு எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில் பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி, தான் வாங்கிக்கொடுத்தது என்ற குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், தனக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கானது கடந்த ஓர் ஆண்டிற்கும் மேலாக விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது. அத்துடன் விசாரணை பட்டியலில் இருந்தும் குறித்த வழக்கு நீக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கினை விசாரணை பட்டியலில் இருந்து நீக்காமல் விசாரிக்க வேண்டும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கமைய குறித்த வழக்கு  நவம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

பகிரவும்...