Main Menu

பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்: சார்லஸ் லெக்லேர்க் முதலிடம்

பர்முயுலா-1 கார்பந்தயத்தின் பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க் முதலிடம் பெற்றுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.

இதன்படி, நடப்பு ஆண்டின் 13ஆவது சுற்றான பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று நேற்று ப்ரான்கோசம்ப்ஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் 308.052 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர்.

இதில் பெர்ராரி அணியின் வீரர் சார்லஸ் லெக்லேர்க், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 23 நிமிடங்கள் 45.710 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

நடப்பு தொடரில், சார்லஸ் லெக்லேர்க், பெற்றுக்கொண்ட முதல் வெற்றி இதுவாகும். அத்தோடு, இவ்வெற்றிக்காக ஹெமில்டனுக்கு முதலிடத்திற்காக வழங்கப்படும் 26 புள்ளிகளும் வழங்கப்பட்டது.

அவரை விட 0.981 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த, மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான லீவிஸ் ஹெமில்டன்  இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 18 புள்ளிகள் வழங்கப்பட்டது.

12.585 வினாடிகள் பின்தங்கிய நிலையில், பந்தய தூரத்தை கடந்த மெர்சிடஸ் பென்ஸ் அணியின் இன்னொரு வீரரான வால்டேரி போடாஸ் மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கு அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டது.

இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 13 சுற்றுகள் முடிவில், இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 268 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இவரை தொடர்ந்து, மற்றொரு மெர்சிடஸ் பென்ஸ் அணியின் வீரரான வால்டேரி போடாஸ் 203 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதனையடுத்து, ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன் 181 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்த 14ஆவது சுற்றான இத்தாலியன் கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் 8ஆம் திகதி, மோன்சா எனி ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

பகிரவும்...