Main Menu

புத்தாண்டு தொடக்கத்தில் புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படுகிறது

ஆங்கில புத்தாண்டு தொடக்கத்தின்போது, லண்டனிலுள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகாரம் ஒலிக்க செய்யப்படவுள்ளது.

96 மீட்டர் உயர எலிசபெத் கோபுர உச்சியில் உள்ள அக்கடிகாரத்தை புதுப்பிக்கும் பணி 2017 முதல் நடைபெறுகிறது. அந்தப் பணி இன்னும் நிறைவடையாத போதிலும், மிக முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அது அவ்வப்போது ஒலிக்க செய்யப்படுகிறது.

அதன்படி புத்தாண்டு தொடக்கத்தை குறிக்கும் வகையில் 31ம் தேதி நள்ளிரவு ஒலிக்க செய்யப்படவுள்ளது. இதையொட்டி மூடி வைக்கப்பட்டிருந்த கடிகாரம் திறக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...