Main Menu

புதிய வசதிகளுடன் கூடிய அடையாள அட்டை அறிமுகம்?

அடையாள அட்டைகளில் புதிய வசதிகள் இணைக்கப்பட்டு புதிய வடிவில் உருவாக்கப்பட உள்ளது.

ஏப்ரல் 26 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இது தொடர்பான இறுதிக்கட்ட முடிவுகள் எட்டப்பட்டு, இந்த புதிய மேம்படுத்தலுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டையில் புதிதாக சில ‘அரச மற்றும் தனியார் சேவைகள் இணைக்கப்பட உள்ளதாக’ அறிய முடிகிறது.

“Service de garantie de l’identité numérique” (SGIN) என அழைக்கப்படும் இந்த அட்டையில் தனிநபர்களுடைய மேலும் சில விபரங்கள் இதில் இணைக்கப்பட உள்ளன. இந்த அட்டையில் பொருத்தப்படும் NCF Chip (இலத்திரணியல் தகவல் கடத்தி) மூலம் மேலும் பல தவல்களை இதில் சேமிக்க முடியும். குறிப்பாக இரண்டாவது பெயர், குடும்ப பெயர், பிறந்த திகதி, முகவரி, அடையாள புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தரவுகள் சேமிக்க முடியும்.

ஆனால் இத்தகவல்களை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியாது. இந்த NFC தகவல் கடத்தி மூலம் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களே (வங்கிகள், தபாலகங்கள் போன்ற…) இத்தகவல்களை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல இடங்களில் விண்ணப்பங்கள் நிரம்புவது, நீண்ட நேர காத்திருப்பு தவிர்த்தல் போன்ற பல நன்மைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து அந்த அட்டைகள் பரீட்சார்த்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், விரைவில் இந்த அடையாள அட்டைகள் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிய முடிகிறது.  

பகிரவும்...