Main Menu

பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவோம் – சஜித் பிரேமதாச

பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்குவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு எமது ஆட்சியில் நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் நான்  கவனம் செலுத்துவேன் என  ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலையமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை குறித்தோ அல்லது பிரதமர் குறித்தோ இன்று வாக்கெடுப்பு நடக்கவில்லை. இது ஜனாதிபதி தேர்தல் இதில் ஜனாதிபதி ஆசனத்தை பிடிக்கவே நாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம். இதில் கொள்கை உள்ளதே தவிர உடன்படிக்கை இல்லை. 

2015 ஆம் ஆண்டு எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது, அதேபோன்று இம்முறையும் எமக்கு ஆதரவு கிடைக்கும் என்றே நினைக்கிறன். அதேபோல் அன்னப்பறவை சின்னத்தில் களமிறங்கவே இப்போதுவரையில் தீர்மானமாக உள்ளது. 

அதேபோல் ஜனநாயக ரீதியில் பயணிக்கும் அனைவருக்கும் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கின்றேன். பொது கொள்கையில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய நோக்கத்தில் நான் முன்னகர்கின்றேன். ஆனால் இதில் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ள நான் தயாரில்லை. சர்வதேச உடன்படிக்கைகோ உள்நாட்டு உடன்படிகைக்கோ நான் அடிபணியவும் மாட்டேன். 

வடக்கு கிழக்கில் மக்கள் 30 ஆண்டுகளால யுத்தத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படும் அதேபோல் இந்த நாட்டில் கஷ்டப்படும் சகலருக்கும் நியாயமான வாழ்கையை உருவாக்கிக்கொடுக்கவே நான் கவனம் செலுத்துவேன் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

பகிரவும்...