Main Menu

பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

பிரேஸிலில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் நாளொன்றுக்கு அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 33,100பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 1,300பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் நாளொன்றுக்கு பதிவான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னதாக ஜூன் 4ஆம் திகதி 31,890பேர் பாதிப்படைந்திருந்ததே அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.

இதற்கமைய பிரேஸிலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 775,184ஆக உள்ளது. அத்துடன், மொத்தமாக 39,797பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 355,087பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 380,300பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,318பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.

பகிரவும்...