Main Menu

பிரிஸ்பேன் டென்னிஸ்: மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் கரோலினா பிளிஸ்கோவா

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த பிரிஸ்பேன் பகிரங்க டென்னிஸ் தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், அமெரிக்காவின் மெடிஸன் கீசும் பலப்பரீட்சை நடத்தினர்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என கரோலினா பிளிஸ்கோவா கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய மெடிஸன் கீஸ், செட்டை 6-4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

இருவரும் தலா 1 செட்டைக் கைப்பற்றியதால் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.

இதில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர். விறுவிறுப்பாக நகர்ந்த இப்போட்டியில், 7-5 என கரோலினா பிளிஸ்கோவா போராடி செட்டைக் கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

இந்த சம்பியன் பட்டம் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறை சம்பியன் பட்டம் வென்ற கரோலினா பிளிஸ்கோவா, இதுவரை இத்தொடரில் மூன்று சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

இதற்கு முன்னதாக கரோலினா பிளிஸ்கோவா, 2011ஆம் மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...