Main Menu

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை!

பிரித்தானியாவில் மிகப்பெரியளவிலான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிரிய ஜனநாயகப் படைகளின் தளபதியான மெர்வன் கமிஷ்லோ, ஆங்கில இதழிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தோற்கடிக்கப்பட்ட கலிபாவின் உறுப்பினர்கள் சிரியாவில் தலைமறைவாக இருந்து வந்தனர்.

அவர்கள் தற்போது ‘கலிபேட்’ வீழ்ச்சிக்கு பழிவாங்கும் விதத்தில், பிரித்தானியா போன்ற நாடுகளில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேற்கத்திய ஆதரவுடைய குர்திஷ் படைகள் இஸ்லாமிய அரசுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தி வருகின்றன. தற்போது சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தத்தினால், கிட்டத்தட்ட எல்லா பிராந்தியங்களையும் இஸ்லாமிய அரசு இழந்துள்ளது.

இராணுவா ரீதியில் வெற்றியடைந்த போது, ஆயிரக்கணக்கான ஸ்லீப்பர் செல்கள் அங்கிருந்து காணாமல் போனார்கள்.

அவர்கள் அனைவரும் தற்போது ரக்கா போன்ற வடகிழக்கு சிரியாவின் பகுதிகளில் குவிந்திருக்கின்றனர். இந்த இடம் முன்னர் இஸ்லாமிய அரசின் கோட்டையாக இருந்தது’ என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...