பிரான்ஸ் நகரசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இன்று
இன்று மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை நகரசபைத்தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுபு திட்டமிட்டபடி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று வீரியமடைந்து தற்போது ‘மூன்றாம் கட்ட’ நிலையில் இருக்கும் போது, தேர்தல் பிற்போடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி இடம்பெறும் என பிரதமர் எத்துவார் பிலிப் அறிவித்துள்ளார். முன்னதாக வாக்களிக்க வரும்போது உங்கள் சொத்த பேனையை கொண்டு வரும்படி பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை பிரதமரின் ஊடகச்சந்திப்பில், பல கட்டுப்பாடுகளுடன் தேர்தல் தீர்மானித்ததன் படி இடம்பெறும். வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கும் பொழுது, ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு வரிசையில் காத்திருக்க வேண்டும். முதியோருக்கும், பலவீனமற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கவேண்டும். பொறுப்புடையவர்களாக கடமையை நிறைவு செய்யுங்கள்! என பிரதமர் கோரினார்.
பகிரவும்...