Main Menu

பிரான்சில் தற்போது 4,500 தொரோனா தொற்றுக்கள் : மூன்றாம் கட்ட நிலையில்

பிரான்சில் தற்போது 4,500 தொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார இயக்குனர் Jérôme Salomon அறிவித்துள்ளார்.  பலி எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 830 தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளது. மொத்தமாக 4,500 பேர் தற்போது பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 72 மணிநேரத்தில் பிரான்சில் கொரோனா தொற்று இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது எனவும் Jérôme Salomon  தெரிவித்துள்ளார்.  தவிர, பிரான்சில் 300 பேர் மோசமான உடல்நலத்துடன் உள்ளதாகவும், நேற்றைய நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  அதேவேளை, பிரான்சில் கொரோனா தொற்று அதிகரித்து, தற்போது <<மூன்றாம் கட்ட>> நிலையில் உள்ளதாகவும் சுகாதார இயக்குனர் குறிப்பிட்டார். 

பகிரவும்...