Main Menu

பிரான்ஸ் தேவாலய பயங்கரவாதத் தாக்குதல்: மேலும் ஒருவர் கைது!

பிரான்ஸ்- நீஸ் நகர நோட்டர் டாம் தேவாலயத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனனர்.

47 வயதான குறித்த நபர், தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவியுடன் தாக்குதலுக்கு முந்தைய நாள் இரவு தொடர்பிலிருந்ததாக விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதற்கிடையே, தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய இப்ராஹிம் இஸாவி குறித்து விபரங்கள் வெளியாகியுள்ளன.

21 வயதான இப்ராஹிம் இஸாவி துனிசியாவிலிருந்து அகதியாக கடந்த மாதம்தான் இத்தாலியின் லம்பேடுஸா தீவுக்கு வந்தார்.

தங்களது நாட்டுக்குள் அவர் சட்டவிரோதமாக வந்துள்ளதாகவும் ஒக்டோபர் 9ஆம் திகதிக்குள் அவர் தாமாக வெளியேறாவிட்டால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இத்தாலி அதிகாரிகள் அவருக்கு அறிவிக்கை அனுப்பியிருந்தனர். இதையடுத்து இஸாவி பிரான்ஸுக்குள் நுழைந்தார்.

தேவாலயத் தாக்குதலின்போது பொலிஸார் சுட்டதில் பலத்த காயமடைந்த அவர், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

கடந்த வியாழக்கிழமை தெற்கு பிரான்ஸ் நகரமான நைஸில் ஒரு தேவாலயத்திற்கு அருகே நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...