Main Menu

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் – வேட்பாளர் ஆதரவும் எதிர்ப்பும்

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2022 ஆம் ஆண்டின் முதலாம் சுற்று வாக்க்கெடுப்பில் Emmanuel Macron மற்றும் Marine Le Pen ஆகிய இருவரும் முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளனர்.

மரீன் லூ பென்னுக்கு வாக்களியுங்கள்! – Eric Zemmour!

‘இரண்டாம் சுற்றில் மரீன் லூ பென்னுக்கு வாக்களியுங்கள்!’ என தனது ஆதரவாளர்களிடம் Eric Zemmour கோரிக்கை வைத்துள்ளார்.

மரீன் லூ பென்னுக்காக ஒற்றை குரல் கூட எழுப்பாதீர்கள்! – Jean-Luc Mélenchon!

ஏப்ரல் 24 ஆம் திகதி இடம்பெற உள்ள இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில், இம்மானுவல் மக்ரோனுடன் மோத உள்ள Marine Le Pen இற்கு ஆதரவாக ஒற்றைக்குரல் கூட எழுப்ப வேண்டாம் என Jean-Luc Mélenchon தெரிவித்துள்ளார்.

இன்றைய முதல் சுற்று வாக்கெடுப்பில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டு, போட்டியில் இருந்து வெளியேறியுள்ள Jean-Luc Mélenchon, சற்று முன்னர் தனது ஆதரவாளர்களுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார். அதன்போதே இதனை தெரிவித்தார்.

“வாக்காளரை தேர்தெடுப்பது உங்கள் உரிமை. நீங்கள் திட்டமிட்டது போல் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். ஆனால் நீங்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள் என்பது எனக்குத் தெரியும். எங்களில் ஒருவர் கூட மரீன் லூ பென்னுக்கு ஆதரவாக ஒற்றைக் குரலைக்கூட எழுப்பக்கூட்டாது!” என Jean-Luc Mélenchon தெரிவித்துள்ளார்.
*

மக்ரோனுக்கு வாக்களிக்காதவர்கள், எனக்கு வாக்களியுங்கள்! – Marine Le Pen அழைப்பு!

‘இன்று மக்ரோனுக்கு வாக்களிக்காத அனைவரும், இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் எனக்கு வாக்களியுங்கள்!’ என Marine Le Pen சற்று முன்னர் தெரிவித்தார்.

இன்றைய முதலாம் சுற்று வாக்கெடுப்பில், முதல் இரண்டாவது இடத்தை பெற்று, இரண்டாம் சுற்றில் மக்ரோனுடன் Marine Le Pen மோத உள்ளார். அவர் தெரிவிக்கையில், “உங்கள் கைகளில் இருக்கும் வாக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகாலத்துக்கான வாழ்க்கைக்கானது. நான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரான்சை மீண்டும் ஒழுங்கமைக்க விரும்புகிறேன்!” என தெரிவித்தார்.
*

மக்ரோனுக்கு வாக்களியுங்கள்!

ஜனாதிபதி வேட்பாளரான Anne Hidalgo, ‘இரண்டாம் சுற்றில் Emmanuel Macronக்கு வாக்களியுங்கள்!’ என அழைப்பு விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தீவிர வலதுசாரியான Marine Le Penக்கு எதிராக உங்களது வாக்கினை Emmanuel Macron க்கு செலுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பில் Anne Hidalgo 1.9% வீத வாக்குகளைப் பெற்றிருதார் என்பது குறிப்பிடத்தக்கது.

****

மக்ரோனுக்கு ஆதரவாக Valérie Pécresse!

‘மனச்சாட்சிப்படி மக்ரோனுக்கு எனது வாக்கு!’ என ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட Valérie Pécresse தெரிவித்துள்ளா.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘Marine Le Pen ஆட்சிக்கு வருவதை தடுக்க, மனச்சாட்சிப்படி மக்ரோனுக்கு வாக்களியுங்கள்!” என தெரிவித்தார்.

இன்றைய முதலாம் சுற்று வாக்கெடுப்பில் Valérie Pécresse, 5.1% வீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.  

பகிரவும்...