Main Menu

பிரான்ஸ் கத்திக்குத்து குறித்த வழக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றம்!

பிரான்ஸில் மூவர் மீது கத்துக்குத்து நடத்திய, தாக்குதல்தாரி தொடர்பான விசாரணைகள், பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுவரையான விசாரணைகளில் இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கவில்லை என்பதாலும், எந்த பயங்கரவாத அமைப்பும் உரிமை கோரவில்லை என்பதாலும் பரிஸ் பொலிஸ் தலைமையகமே இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.

இறுதி நேர விசாரணைகளில், தாக்குதலில் சில மத அடிப்படைவாத செயற்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

வில்லேஜுயிஃப் நகரின் பார்க் டெஸ் ப்ரூயர்ஸ் பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த வெள்ளிக்கிழமை 2 மணியளவில் நடத்தப்பட்ட கத்துக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிந்ததோடு, இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது, பொலிஸார், தாக்குதல்தாரியை கைதுசெய்ய முற்பட்ட போது தொடர்ந்து தாக்குதல் நடத்த முற்பட்டதால் அவரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

இந்த தாக்குதலின் போது இரு தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதோடு, பின்னர் ஒரு பெண்னொருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

முதலில் 22 வயதுடைய பெண்னை தாக்க முற்பட்ட போது, அதனை தடுக்க முயன்ற 56 வயதான அவரின் கணவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.

தாக்குதல்தாரி பரிஸைச் சேர்ந்த நாதன் சி என்ற இளைஞன் எனவும், அவர் 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் இஸ்லாம் மதத்தை தழுவியிருந்ததும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி பிறந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...