Main Menu

பிரான்ஸில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு 55 வீதமான மக்கள் ஆதரவு!

பிரான்ஸில் ஒருமாத காலமாக முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்திற்கு, 55 வீதமான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஜர்னல் டு டிமஞ்சே ஊடகத்திற்காக ‘இன்ஸ்டிட்யூட் ஃபிராங்காயிஸ் டி ஓபினியன் பப்ளிக்’ நடத்திய கருத்து கணிப்பிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு கடந்த ஜனவரி 2ஆம் மற்றும் 3ஆம் ஆகிய திகதிகளில் 1,005 பேரிடம் எடுக்கப்பட்டிருந்தது.

இந்த கருத்து கணிப்பில், தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் மற்றும் கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

தொழிலாளர்களின் கோரிக்கை விடயத்தில் அரசு இறங்கி வரவேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப் போயுள்ளன.

தற்போது இந்த போராட்டத்தின் வலு சற்று குறைந்திருப்பதாக கூறப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...