Main Menu

பிரான்ஸில் தொடரும் போராட்டம்: போக்குவரத்தில் இன்று சற்று முன்னேற்றம்

பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் இருபத்து இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தினால் பெருமளவான போக்குவரத்துக்கள் தடைப்பட்டிருந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) சற்று முன்னேற்றம் கண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, தனியங்கி சேவையான 1ஆம் மற்றும் 14ஆம் இலக்க மெற்றோக்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், 3ஆம், 4ஆம், 7ஆம், 8ஆம் மற்றும் 10ஆம் இலக்க மெற்றோக்கள் நெருக்கடியான வேலை நேரத்தில் மாத்திரம் இயங்கும். 3ஆம் மற்றும் 11ஆம் இலக்க மெற்றோக்கள் இன்று காலை மாத்திரம் மட்டுமே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ஆம் இலக்க மெற்றோ மாலை நேர நெருக்கடியான வேலை நேரத்தில் மாத்திரம் இயங்கும். 9ஆம் இலக்க மெற்றோ நாள் முழுவதும் இயங்கும். ஆனால் மூன்றில் ஒரு சேவை மாத்திரமே செயற்படும்.

RER A மூன்றில் ஒன்றும், RER B நெருக்கடியான வேலை நேரத்தில் மூன்றில் ஒன்று எனும் கணக்கிலும் இயங்கும். மூன்றில் இரண்டு பேருந்துகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, தேசிய ரீதியில் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்ததற்கு அமைய, கடந்த 5ஆம் திகதி முதல் பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் முடங்கிப் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...