Main Menu

பிரான்ஸில் கொரோனா தொற்று 21 இலட்சத்து 27 ஆயிரத்தை கடந்தது

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 21 இலட்சத்து 27 ஆயிரத்து 51 அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

24 மணி நேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 253 புதிய இறப்புகள் பதிவானதாகவும், எனினும் இது வெள்ளிக்கிழமை பதிவானதை விட குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக பிரான்ஸில் 634 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 ஆயிரத்து 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸால் பிரான்ஸில் மொத்தம் 48 ஆயிரத்து 265 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் 33 ஆயிரத்து 231 பேர் மருத்துவமனைகளில் இறந்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

தற்போது அங்கு 149,521 குணமடைந்துள்ளதாகவும் 19 இலட்சத்து 29 ஆயிரத்து 12 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...