Main Menu

பிரான்ஸில் அந்தரத்தில் பறந்து சாகசம் புரிந்த வீரர்!

பிரான்ஸில் ராணுவ வீரரான பிரான்க் ஜபாதா என்பவர் தானே சுய முயற்சியில் தயாரித்த ‘ஃபிளைபோட்’ என்ற ஜெட் உந்துசக்தியிலான மிதவையில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரான்ஸில் வருடாந்தம் ஜூலை 14 ஆம் திகதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரிஸில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி மக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சியொன்று தென்பட்டது. சிறிய ஜெட் எந்திரத்தில் நின்றபடி கருப்பு நிற உடையணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் அந்தரத்தில் பறந்து வட்டமடித்தார்.

பிரான்க் ஜபாதா என்பவர் தானே சுயமாக தயாரித்த ‘ஃபிளைபோட்’ என்ற ஜெட் உந்துசக்தி இந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார்.

இது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாங்கள் பார்ப்பது கனவா, நிஜமா என்று புரியாமல் வியப்புடன் பார்த்து ரசித்தனர். பலர் ஆர்வத்துடன் தங்களது கைத்தொலைபேசிகளில் ஔிப்படம் மற்றும் ஔிப்பதிவு செய்தனர்.

ஜனாதிபதி மக்ரான் இது தொடர்பான காணொளியை டுவிட்டரில் பதிவிட்டு, நவீனம் மற்றும் புதுமையான முயற்சிகளால் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...