Main Menu

பிரான்சுடன் மோதல்: பரிஸ் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்தது அல்ஜீரியா!

பிரான்ஸுக்கான தங்கள் நாட்டுத் தூதரை உடனடியாகத் திரும்ப அழைத்துள்ளதாக அல்ஜீரியா அறிவித்துள்ளது.

அல்ஜீரியா அதன் முன்னாள் காலனித்துவ ஆட்சியாளர் பிரான்சை ‘இனப்படுகொலை’ என்று குற்றம் சாட்டியது மற்றும் பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறிய சர்ச்சையான கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளது.

அத்துடன் அல்ஜீரிய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் இராணுவ விமானங்களை அதன் வான்வெளியில் பறக்க தடை விதித்தது.

பிரான்ஸின் ஜெட் விமானங்கள், அல்ஜீரிய பிரதேசத்தின் மீது பறந்து மேற்கு ஆபிரிக்காவின் சஹேல் பகுதியை சென்றடைகின்றன. அங்கு அதன் வீரர்கள் பர்கானே நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆயுதக் குழுக்களுடன் போரிட உதவுகிறார்கள்.

ஆனால், இந்த முடிவு சாஹலில் மேற்கொள்ளப்பட்ட எங்கள் செயற்பாடுகளையோ அல்லது உளவுத்துறை பணிகளையோ பாதிக்காது என இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் பாஸ்கல் இயானி கூறினார்.

அல்ஜீரியாவின் அரசாங்கமும் இராணுவமும் வான்வெளியை மூடுவது குறித்து எவ்வித கருத்தும் உடனடியாக தெரிவிக்கவில்லை.
அல்ஜீரியா, மொராக்கோ மற்றும் துனிசியா குடிமக்களுக்கு வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையை கடுமையாகக் குறைப்பதற்கான பிரான்ஸின் முடிவின் அழுத்தத்தின் மத்தியில் இந்த நகர்வுகள் வந்துள்ளன.

லு மாண்டே பத்திரிக்கையின் கூற்றுப்படி, மக்ரோன் அல்ஜீரியாவை அரசியல்-இராணுவ அமைப்பு ஆளுகிறது என்றும் நாட்டின் அதிகாரப்பூர்வ வரலாறு உண்மைகளின் அடிப்படையில் அல்ல எனவும் கூறினார்.

அதேவேளை பத்திரிக்கை செய்தி, பிரான்ஸ் ஜனாதிபதி அல்ஜீரிய சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக அல்ல, ஆளும் உயரடுக்கு பற்றி குறிப்பிடுகிறார் என்பதை தெளிவுபடுத்தியது.

ஆனால், உள் விவகாரங்களில் எந்த தலையீடுகளும் இல்லை எனவும் இது ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என அல்ஜீரிய ஜனாதிபதி விபரித்துள்ளார்.

பகிரவும்...