Main Menu

நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக தனிமைப் படுத்தப் படுவார்கள் – அவுஸ்ரேலியா அறிவிப்பு!

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குவரும் அனைவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள் என அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சிதான் என்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவுஸ்ரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொகரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல உலக நாடுகளும் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளின் போக்குவரத்தை தடை செய்துள்ள நிலையில் அவுஸ்ரேலியா தமது நாட்டுக்கு வருபவர்களை தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவுஸ்ரேலியா பிரதமர் மேலும் தெரிவிக்கையில், “எங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் சில மாற்றங்களை செய்யவேண்டியுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து எங்கள் நாட்டிற்கு வரும் எவரும் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள், இது வைரஸைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி மட்டுமல்ல, எங்களைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியுமாகும்.

இந்த அவசர கால நடைமுறை இன்று அதிகாலை 1 மணியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. அனைத்து பயணக் கப்பல்களும் முற்றிலுமாக தடை செய்யப்படும். இதனால் அவுஸ்ரேலியாவை பார்வையிட வருபவர்களின் போக்குவரத்து மிக விரைவாக வறண்டு போகும் என்று எதிர்பார்க்கிறேன்.

நாட்டில் ஏற்கெனவே 269 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இதுவரை கண்டறியப்பட்டுள்ளது, இப்போது அமெரிக்காவிலிருந்து வந்துள்ளவர்களின் புதிய எண்ணிக்கை வேறு கூடியுள்ளது. இதுவே எங்கள் நடவடிக்கைக்கு முக்கியமான ஆதாரம்” என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...