Main Menu

பிரதமர் மோடிக்கு ரஷியாவின் மிக உயரிய விருது

இந்தியா-ரஷியா இடையிலான நல்லுறவுகளை மிக சிறப்பான அளவுக்கு மேம்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷியாவின் மிக உயரிய ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

இயேசுநாதரின் முதல் அப்போஸ்தலரான புனித ஆன்ட்ரு பெயரால் ரஷியாவை முன்னர் ஆட்சி செய்த மாமன்னர் டிசார் பீட்டர் என்பவரால் 1698-ம் ஆண்டில் அந்நாட்டுக்கு மிகச்சிறப்பான சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில் ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருது உருவாக்கப்பட்டது.

ஆண்டுதோறும் சிறப்புக்குரிய நபர்களை தேர்வு செய்து இவ்விருது வழங்கப்பட்டு வந்தது. பின்னர், ரஷியாவின் அருகாமையில் இருந்த பல பகுதிகளை ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற பெயர் கொண்ட அமைப்புக்கு ரஷியா தலைமை தாங்கியபோது இந்த விருது பல ஆண்டுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர், 1998-ம் ஆண்டிலிருந்து இந்த விருது தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டின் ‘செயின்ட் ஆன்ட்ரு அப்போஸ்தலர்’ விருதுக்கு பிரதமர் நரேந்திர மோடி தேர்வாகியுள்ளார்.

இந்தியா -ரஷியா இடையிலான நல்லுறவுகளை மிக சிறப்பான அளவுக்கு மேம்படுத்தியமைக்காகவும், மிக மதிப்புக்குரிய நட்புநாடாக ரஷியாவுடன் பல்வேறு வகைகளில் இணைந்து செயல்பட்டதற்காகவும் மோடிக்கு இவ்விருது வழங்கப்படுவதாக டெல்லியில் உள்ள ரஷியா தலைமை தூதரகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...