Main Menu

பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியானது- தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், சத்திஷ்கர் மாநில முன்னாள் முதல்வர் ராமன் சிங், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் மத்திய அமைச்சர் ராதா மோகன் சிங் உள்ளிட்டோர் பா.ஜ.க. கட்சியின் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பா.ஜ.க.வின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா உட்பட தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் ஒக்டோபர் 28ஆம் திகதி சட்டமன்றத் தேர்தல் ஆரம்பமாகி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதேபோல் அடுத்த ஆண்டு அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்காக தேசியக் கட்சிகள் முதல் மாநிலக் கட்சிகள் வரை அனைத்துத் தரப்பினரும் தயாராகி வருவதுடன் பல கட்சிகள் தங்கள் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...